கவலை மறந்து சிரிக்க - நெல்லை கண்ணன்
நெல்லைக் கண்ணன் (பிறப்பு: சனவரி 27, 1945) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்[சான்று தேவை]. திருநெல்வேலியில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு. சுப்பையாபிள்ளை, தாயார் முத்து இலக்குமி, இவருடன் உடன் பிறந்தோர் எட்டுப் பேர். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.