பாரத் ஜோடோ யாத்திரை... பலன் தருமா காங்கிரஸுக்கு? | News-30/01/2023
`ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடைக்கோடி கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 3,500 கி.மீட்டராக நீண்ட பாதயாத்திரை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகரில் முடிவடையவிருக்கிறது. சுமார் 150 நாள்களாகப் பல்வேறு தடைகள், இயற்கை இடர்கள், பா.ஜ.க-வின் விமர்சனங்களைச் சமாளித்து, பல்வேறு மாநில மக்களையும் சந்தித்துவிட்டார் ராகுல் காந்தி.Credits:Author - ரா.அரவிந்தராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.