அவளின் குரல் - சுப்பையா சண்முகம் 'எய்ம்ஸ்' நியமனம்
'பெண்களிடம் இழிவாக நடந்துகொள்பவர்களுக்கு இங்கு பாதுகாப்பும் பதவியும் தரப்படும்!' - சுப்பையாவின் 'எய்ம்ஸ்' நியமனத்துக்கு ஒரு கேள்வி 'தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காகக் கொடுக்கப்படும் பரிசா?''- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் கேள்வி இது. தமிழ்நாட்டுப் பெண்கள் பலரின் கொதிப்பான கேள்வியும் அதுவே. கடந்த ஜூலை மாதம், சென்னை நங்கநல்லூர் அப்பார்ட்மென்ட்டில் தனியாக வசித்துவந்த பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட கார் பார்க்கிங் பிரச்னையில், அவர் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தவர் சுப்பையா சண்முகம். அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதரமாக இணைக்கப்பட்டு அவர்மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் சிறுநீர் கழித்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி கண்டனங்கள் வலுத்த பிறகே, இரண்டு வாரங்கள் கழித்து அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தாமதத்துக்குக் காரணம்..? சுப்பையா சண்முகத்தின் சமூக அடையாளங்கள்.