அவளின் குரல் | அமீர் தெரிந்தே அப்படி சொல்லியிருக்கமாட்டார்... ஆனாலும்?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து, அப்படத்திலிருந்து அவர் விலகினார். இதற்கிடையே, இப்பிரச்னையில் ட்விட்டரில் விஜய் சேதுபதியின் பெண் குழந்தைக்கு ஒருவன் சிறார் வதை மிரட்டல் விடுக்க, காவல்துறை அவனை தேடிக்கொண்டிருக்கிறது.   முன்னதாக, ஐபிஎல் மேட்ச் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தபோது, குஜராத்தை சேர்ந்த 16 வயது ப்ளஸ் டூ மாணவன், தோனியின் பெண் குழந்தைக்கு சிறார் வதை மிரட்டல் விடுத்து, கைதுசெய்யப்பட்டான்.   தெரு சண்டை, பங்காளி சண்டை, நண்பர்களுக்கு இடையிலான சண்டை, தொழில்முறை சண்டை என எல்லா இடங்களிலும், எதிரிலிருக்கும் ஆணை அவமானப்படுத்த, அவன் வீட்டுப் பெண்களை இழிவார்த்தைகளில் திட்டுவது, சமூக மனநோய். அதன் நீட்சிதான் இப்போது சோஷியல் மீடியாவிலும் தொடர்கிறது.

2356 232