மோடி பொய் சொல்கிறார் - குற்றம் சாட்டும் ராகுல்! | Solratha Sollitom-30/08/2023
* ரக்ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைப்பு* "நான் தமிழகத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்க தயார். ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனாதாவினர் என்னை எதிர்த்து ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக வாங்க முடியுமா? பா.ஜ.க.வில் 40 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா?" - சீமான்* கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.* ஒரே நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி, கனிமொழி* "மோடி வாரணாசியில் போட்டியிட்டால் சீமான் வாரணாசியில் போட்டியிடத் தயாரா?" - அண்ணாமலை* நாளை மும்பையில் நடக்கவிருக்கும் இந்தியா கூட்டணி ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் பயணம்* கர்நாடக முதல்வர் சித்தராமையா அணைகளில் தண்ணீர் வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியதை தான் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகையால் வேறுவழி கிடையாது. மறுபடியும் நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதான்- துரைமுருகன்.-Solratha Sollitom.