கவர்னரைப் புறக்கணிக்கும் ஸ்டாலின்! | Solratha Sollitom-14/08/2023

* இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.* மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் நீட் எதிர்ப்பு - கவர்னர் முன் நீட்டை எதிர்த்த தந்தை சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் ஜெகதீஷ். தந்தை செல்வசேகர் தற்கொலை, ஜெகதீஷ் நண்பன் ஃபயாஸ்தீன் கலங்கடிக்கும் பேட்டி* சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. * பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் - இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் கவர்னரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, கவர்னர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். - ஸ்டாலின்* காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

2356 232