தி.மு.க.வைச் சீண்டிய நிர்மலா சீதாராமன், சுயபுராணம் பாடிய மோடி! | Solratha Sollitom-10/08/2023
* "சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க.வினர், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா?" - நிர்மலா சீதாராமன் * தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய டுவிட்டர் (தற்போதைய 'எக்ஸ்') நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. * நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரதமர் மோடியை குற்றஞ்சாட்டி பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. கடந்தமுறை அதானியைக் குற்றம் சாட்டி ராகுல் பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.* அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.* தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர், எதிர்க்கட்சிதலைவர், தலைமை நீதிபதி அடங்கிய குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதி இல்லாமல் குழு அமைக்க மத்திய அரசு மசோதா தாக்கல்* பிரதமர் மோடியின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தோம் என மக்களவை காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறும் அளவுக்கு எங்களிடம் பலம் இல்லை என்பது எங்களுக்கே தெரியும். மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்திய நாட்டு மக்கள் நலன் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை; பிரதமர் வர வேண்டும் என்றே கூறினோம் எனவும் கூறினார்.* தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் 90 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிஐ தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது.* வெற்று சவடால் அடித்த மோடி.-Solratha Sollitom