செந்தில் பாலாஜி கைது செல்லும் - தி.மு.க.வுக்கு மீண்டும் பின்னடைவு! | Solratha Sollitom-14/07/2023

* தி.மு.க. ஊழல் பட்டியல் சம்மந்தமான பாகம் இரண்டு தயாராக உள்ளது. - அண்ணாமலை * சந்திரயான் - 3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்...! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி * நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். * 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னதாக இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட நீதிபதிகளில், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் கருத்துடன் தான் ஒத்துப்போவதாக தெரிவித்தார். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்தான். இதனால் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும், தடை கோர முடியாது, தான் குற்றமற்றவர் என்பதை செந்தில் பாலாஜி நிரூபிக்கவேண்டும், என நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார். * மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சதுர்வேதி சாமியார், ஜூலை 31-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -Solratha Sollitom.

2356 232