டாஸ்மாக் பிரச்னையில் தடுமாறும் ஸ்டாலின் அரசு! | Solratha Sollitom - 12/07/2023

* காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. * பெண் பத்திரிகையாளரின் மைக்கை உடைத்த பிரிஜ் பூஷன் சிங் * செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் உள்ள மதுக்கடையில் மதுப்புட்டிகளுக்கு அதிகபட்ச விலையை விட ரூ.10 அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய ஒருவரை செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா என்பவர் கண்மூடித்தனமாக தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. * "தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து மீள முடியாத தி.மு.க.,வினர் மத்திய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்டனர்" - எடப்பாடி பழனிசாமி * மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும் என்பதால், பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடாது என்று சட்ட ஆணையத்தை திமுக வலியுறுத்தி உள்ளது. * "பிறப்பால் ஒருவர் தங்களை உயர்ந்தவராகவும், மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதேனும் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்யலாம்." - மதுரை உயர்நீதிமன்றம் Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

2356 232