சீமானுக்குத் துணைநின்ற ஸ்டாலின்! | Solratha Sollitom-01/06/2023
* மேகதாது திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் நான் முறையிடுவேன்" - கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார்* ஸ்டாலின் டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.* ராகுல் : எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை. * மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் , ``அவர் (ராகுல்காந்தி) பிரதமர் மோடியை குறிவைக்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதிக்கிறார். அவர் பிரதமர் மோடியை அவமதிக்க விரும்புகிறார். ஆனால் அது இந்தியாவை அவமதிப்பதாகி விடுகிறது"* சென்னை கொரட்டூரில் ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைதுCredits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed