சிக்கலில் சிக்கும் சீமான்! | 22/02/2023
* "ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம்" - ஜெயக்குமார் பேட்டி* எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.* 100 மோடி- அமித்ஷா வந்தாலும் 2024-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி- மல்லிகார்ஜுன் கார்கே* சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. * கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் - மா.சுப்பிரமணியன்* ட்விட்டரில் தமிழிசை சௌந்தர்ராஜன் - சு. வெங்கடேசன் மோதல்* டில்லி மேயர் பதவியை கைப்பற்றியது ஆம் ஆத்மி... மேயர் ஷெல்லி ஓபராய்* குஜராத் மோர்பி பால விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.* ஈரோடு கிழக்கு தேர்தல் பரப்புரையின் போது அருந்ததியர் மக்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் இழிவாக பேசியது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி அக்கட்சி வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்* கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என்ற ஆளுநரின் ஆர்.என். ரவி பேச்சு அறியாமையின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed