Ep 1 Spartacus | உலகை மாற்றிய தலைவர்கள் | Hello Vikatan

மனிதர்களை மனிதர்களே அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிக்கிடந்தது. ரோம் நகரில் இந்தக் கலாசாரம் கொஞ்சம் தீவிரமாக இருந்தது. பொன், பொருளை வைத்திருப்பதைப் போல, அதிக அடிமைகளை வைத்திருப்பதையும் கவுரவமாக கருதியவர்கள் அங்கு நிரம்ப இருந்தனர்.மாட மாளிகைகளை கட்டுவதற்காகவும், தோட்டம் வயல்களை பராமரிப்பதற்காகவும், சொல்லும் வேலையை சொன்னபடி செய்யவும், தங்களை புகழ்ந்து கவிபாடவும் அந்த அடிமைகளை செல்வச்செழிப்பு மிகுந்த பலரும் பயன்படுத்தினர். மேலும் சிலர் தங்களை எதிர்க்க நினைப்பவர்களிடம் வாதங்கள் செய்வதற்கும், போர்புரிவதற்கும் கூட, தாங்கள் விலை கொடுத்து வாங்கியவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.அப்படி விலைக்கு வாங்கப்பட்டவர்களில் ஒருவன் தான், ஸ்பார்டகஸ் (Spartacus).Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat

2356 232