Top Reasons To Remember K. Kamaraj | Periyorkale Thaimarkale Ep64
‘‘எந்தச் சொத்தும் இல்லாதவர்க்கு கல்வி ஒரு சொத்தாகும். கல்வி என்ற சொத்தைப் பெற்றுவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்துபோகும்” என்றார் காமராஜர். சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில், உடலில், குடும்பத்தில் தன்னம்பிக்கை ரத்தம் பாய்ச்சுவதற்கு காமராஜர் காலம் பயன்பட்டது. இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசாங்கம், பள்ளிக் கூடங்களைத் தனியாருக்கு விட்டுவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் செய்யும் அநியாய வசூலுக்கும், அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தட்டிக்கழிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் காமராஜரை உச்சியில் கொண்டுபோய் உட்கார வைக்க வேண்டி உள்ளது.Podcast channel manager- பிரபு வெங்கட்