Story Behind TamilNadu Chief Minister Kumarasamy | Periyorkale Thaimarkale Ep56
முதல் காரணம்: ‘‘எனக்கு உடல்நலம் இல்லை. அதனால், இந்தப் பொறுப்பை ஏற்க இயலாது!”இரண்டாவது காரணம்: ‘‘சுதந்திரத்துக்கு முந்தைய கட்சிபோல் இப்போது காங்கிரஸ் இல்லை. நாட்டு விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எந்தச் சுயநலமும் இல்லாமல் ஒரே குடும்பச் சகோதரர்களாக நாம் போராடினோம். ஆனால், இன்று பதவிக்காக ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைக்கிறார்கள். போட்டி, பொறாமை அதிகமாகி விட்டது. கோஷ்டி மனப்பான்மை உள்ளவர்கள் அதிகம் இருக்கும், காங்கிரஸ் கட்சியில் என்னால் முதல்வராக நீடிக்க முடியாது. என்னை விட்டுவிடுங்கள்.”- இந்த இரண்டு காரணங்களையும் நீண்ட நேரம் விளக்கினார் பி.எஸ்.குமாரசாமி ராஜா.இவர் போட்டியிடாவிட்டால் ராஜாஜி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பதால், ராஜாவையே முதல்வர் பதவிக்குக் கட்டாயப்படுத்தினார் காமராஜர்.Podcast channel manager- பிரபு வெங்கட்