P. S. Kumaraswamy Raja C.M Of Madras Presidency And Madras State | Periyorkale Thaimarkale Ep55
“நான் பதவி விலகச் சம்மதிக்கிறேன். என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வர வேண்டும்” என்று ஓமந்தூரார் சொல்லி... அடையாளம் காட்டப்பட்டவர் தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவுத் துறை ஏட்டில், ‘அச்சம் ஊட்டும் நகரம்’ என்று அழைக்கப்படுவது ராஜபாளையம். பழைய பாளையம், புதுப்பாளையம் என்று இருந்த இரண்டு கிராமங்கள் இணைந்து ராஜபாளையம் நகரம் ஆனது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தெருவெங்கும் தேசிய எழுச்சி இருந்ததால் இந்த ஊருக்கு, ‘சுயராஜ்ய பாளையம்’ என்று பட்டம் சூட்டினார் எஸ்.சீனிவாச ஐயங்கார். பாளையம் என்றாலே படைவீரர்கள் தங்கும் இடம் என்று பொருள்.Podcast channel manager- பிரபு வெங்கட்