குட்டி விலங்குகளுக்கு ராணித் தேனீ கொடுத்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா?! #BedTimeStories - 26
ஒரு காட்ல பெரிய மலையொண்ணு இருந்துச்சாம். அந்த மலையில உயரமான மரம் ஒண்ணு இருந்துச்சு. அதுல ரொம்ப பெரிய்யய... தேனடை ஒண்ணு இருந்துச்சு. அந்த மலையில வாழ்ந்துகிட்டிருக்குற எல்லா விலங்குகளுக்கும் அந்தத் தேனடை மேல ஒரு கண்ணு.