ஒரு குளத்துல ரெண்டு மீன்; ரெண்டு குணம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 25
ஒரு குளத்துல ரெண்டு மீன்கள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. ஒரு மீனோட பேரு பாசிட்டிவ். இன்னொரு மீனோட பேரு நெகட்டிவ். பாசிட்டிவ் மீன் எந்த விஷயமா இருந்தாலும் அதோட நல்ல பக்கத்தை மட்டுமே பார்க்கும். நெகட்டிவ் மீனோ நல்லவங்ககிட்ட கூட ஏதாவது கெட்ட விஷயம் இருக்குதான்னு தேடும்.