அதே அரசியல், அதே நாடகம்... உங்கள் மேல் பரிதாபம்தான் வருகிறது குஷ்பு! | அவளின் குரல் - 02

`கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் இருக்கிறோம். இறுதி மூச்சுவரை பெண்களின் கண்ணியத்துக்காகப் போராடுவோம்' என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ள குஷ்பு, `ஒவ்வொரு பெண்ணுக்காகவும் நடத்தப்படும் போராட்டம் இது' என்றிருக்கிறார். உண்மையில் அரசியல் விளையாட்டில் குஷ்பு எனும் பெண் பயன்படுத்தப்படும் விதத்தை பார்க்கும்போது, நமக்குத்தான் அவர் மேல் பரிதாபம், அயற்சி ஏற்படுகிறது.  அரசியலில் கட்சிகள் மாறுவதும், கொள்கைகள் மாறுவதும் இயல்புதான். ஆனால், பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் `அப்படி ஒரு பிரச்னையே இல்லை' என்று பெண்களையே எதிர்வரிசையில் நிற்கவைத்து சொல்லவைக்கும்போது ஏற்படும் அயற்சி அது. `தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பு பற்றி குஷ்பு கேவலமாகப் பேசுகிறார்' என்று, பெண்களின் மகப்பேறு ஆரோக்கியம் குறித்து அவர் சொன்ன கருத்துகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டபோது பாதிக்கப்பட்டவராக நின்றார் குஷ்பு. இப்போது அதே கத்தரிப்பு, சித்திரிப்பு வேலைகளை அவரே செய்துகொண்டிருக்கிறார்.

2356 232