Lockdown Talks Tamil Podcast - Episode 33 #உணவு #GOODFOOD #GOODMOOD #Burmese #Atho #பர்மா #அத்தோ
உணவு என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும்.[1] உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசியமான சத்துகளை உணவு பெற்றுள்ளது. உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு அவ்வுயிரினத்தின் உடல் செல்களால் தன்வயமாக்கப்பட்டு, வளர்ச்சியடையவும் உயிர்வாழவும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.வரலாற்று ரீதியாக, மனிதர்கள் இரண்டு முறைகளில் உணவு சேகரித்துக் கொண்டனர்: வேட்டை மற்றும் விவசாயத்தின் மூலம் சேகரித்தல் என்பன அவ்விரு வகைகளாகும். உலகில் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்குத் தேவையான, இன்றியமையாத உணவின் பெரும்பகுதியை இன்று உணவுத் தொழில்கள் வழங்கி வருகின்றன. அனைத்துலக உணவு பாதுகாப்பு நிறுவனம், உலக வள மையம், உலக உணவு திட்டம் அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அனைத்துலக உணவு தகவல் கவுன்சில் போன்ற அனைத்துலக அமைப்புகள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் முதலியனவற்றை கண்காணிக்கின்றன. நிலைத்தன்மை, உயிரியற் பல்வகைமை, காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து பொருளாதாரம், மக்கள்தொகை வளர்ச்சி, நீர் வழங்கல் மற்றும் உணவுக்கான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவ்வமைப்புகள் விவாதித்து வருகின்றன.உணவுக்கான உரிமை என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு மனித உரிமையாகும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான பசிதீர்க்க போதுமான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது.End your week with good food & good mood! Fun, food It is time to lay back and Enjoy this Weekend.#food#tamilpodcast#burmese#Atho#cuisines