Lockdown Talks Tamil Podcast - Episode 24

09-08-21#aug09இந்த ஆகஸ்ட் 9, சர்வதேச பூர்வீக மக்களின் தினம். உலகம் முழுவதும் 90 நாடுகளில் 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர், இது உலக மக்கள்தொகையில் 6.2 சதவீதமாகும்.பழங்குடி மக்கள் தனித்துவமான கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகள் என்று பரந்த பன்முகத்தன்மையைக் கொண்டவர்கள். நிலங்கள் தான் அவர்களின் உயிராக இருக்கிறது. அவர்களின் சொந்த உலகக் கண்ணோட்டங்கள் அடிப்படையில் வளர்ச்சியை பற்றி மாறுபட்ட கருத்துக்களை வைத்திருக்கிறார்கள்.உலகெங்கிலும் பல பூர்வீக மக்கள் சுயமாக ஆட்சி செய்தாலும், பலர் இன்னும் தங்கள் நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்களைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசாங்கங்களின் அதிகாரத்தின் கீழ் தான் வருகிறார்கள்."Indigenous people worldwide continue to face overwhelming marginalization, discrimination and exclusion. Respect for the rights of indigenous peoples means ensuring equal and meaningful participation, full inclusion and empowerment." - Antonio Guterres #IndigenousDay#பூர்வீகமக்கள்

2356 232