Young Man Who Had An Aurgivement With Gandhiji |Periyorkale Thaimarkale Ep60
காரைக்குடிக்கு வந்த காந்தி, அதற்கு அருகில் இருக்கும் சிராவயலில் தனது பெயரால் இருக்கும் ஆசிரமத்தைப் பார்க்க வந்தார். அது 1927-ம் ஆண்டு.தன்னைத் தேடி காந்தியே வந்துவிட்டதைப் பார்த்து அந்த இளைஞனுக்குப் பரவசம் ஏற்படவில்லை. அதற்குச் சில நாட்களுக்கு முன் சபர்மதி ஆசிரமத்தில் நோயால் துடித்த கன்றுக்குட்டியை ஊசி போட்டுக் கொன்று விடலாம் என்று அனுமதி தந்த காந்தியின் மீது கோபம் கொண்டவனாக அந்த இளைஞன் இருந்தான். காந்தியைப் பார்த்ததும், ‘ஏன் அப்படிச் செய்தீர்கள்?’ என்று அந்த இளைஞன் சண்டை போட்டான். அதே போல், ‘வர்ணாசிரம தர்மம் பற்றி நீங்கள் எழுதுவது சரியல்ல’ என்றும் அந்த இளைஞன் அவரிடம் விவாதித்தான். அனைத்துக்கும் பொறுமையாக விளக்கம் அளித்த காந்தி,Podcast channel manager- பிரபு வெங்கட்